தாய்கிழவி

சிவகார்த்திகேயனின் SK புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி 27ம் தேதி வெளியான திரைப்படம் தாய் கிழவி.



பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் ராதிகாவின் தாய்கிழவி திரைப்படம்... இத்தனை கோடி கலெக்ஷனா? - Related Image

அறிமுக இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள இப்படம் குடும்பப் பொறுப்பு, தாய்ப்பாசம் மற்றும் நிதி விழிப்புணர்வு ஆகியவற்றை பேசும் உணர்வுபூர்வமான படமாக அமைந்துள்ளது.

ஒரு சாதாரண குடும்பத்தில் திடீர் ஏற்படும் மருத்துவ அவசர நிலை அந்தக் குடும்பத்தின் நிதி நிலையை பாதிக்கிறது என்பதை மிகவும் உணர்ச்சி கரமாக இந்த படம் காட்டுகிறது.

பாக்ஸ் ஆபிஸ்

இந்த வருடம் வெளியான படங்களில் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு திரைப்படமாக தாய்கிழவி அமைந்துள்ளது.

குடும்பம் குடும்பமாக சென்று மக்கள் இப்படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர், ராதிகாவின் நடிப்பிற்கு மக்கள், பிரபலங்கள் என அனைவரும் பெரிய அளவில் பாராட்டி வருகிறார்கள்.

இதுவரை இப்படம் மொத்தமாக ரூ. 62 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.