


மைனா நந்தினி
சின்னத்திரையில் பிரபலமாகி இன்று வெள்ளித்திரையில் ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகை மைனா நந்தினி. இவர் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார்.

இதை தொடர்ந்து சின்னத்தம்பி, அரண்மனை கிளி என சீரியல்களில் நடித்து வந்தார். வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்து வந்த இவருக்கு, சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.
இதன்பின், அரண்மனை 3, விக்ரம், விருமன், தலைவன் தலைவி என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக பிரம்மாண்டமாக உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
ஸ்லிம்மாக மாறிய நந்தினி
நடிகை மைனா நந்தினி தற்போது தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.நந்தினிமட்டுமின்றி அவருடைய கணவரும் நடிகருமான யோகேஷும் உடல் எடையை குறைத்துள்ளார்.
இவர்கள் இருவருடைய சமீபத்திய புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும், 'நந்தினி - யோகேஷ் ஜோடியா இது?' என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள். அந்த அளவிற்கு ஆளே மாறிவிட்டனர். இதோ பாருங்க:
View this post on InstagramA post shared by Nandhini Myna (@myna_nandhu)
View this post on InstagramA post shared by Nandhini Myna (@myna_nandhu)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by Nandhini Myna (@myna_nandhu)
Source: Entertainment News