
ஜெயம் ரவி என்கிற தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்ட பின் திடீரென விவாகரத்தை அறிவித்தார் ரவி மோகன். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் தற்போது நடந்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க ரவி மோகன் தனது புது தோழி கெனிஷா உடன் இருந்து வருகிறார். புது தயாரிப்பு நிறுவனம் தொடங்கியது, இயக்குனராக அறிமுகம் ஆனது என பல முக்கிய முடிவுகளை அதன் பின் எடுத்தார் ரவி மோகன்.
சமீபத்தில் விஜய் விவாகரத்து வழக்கு சர்ச்சை வெடித்தபிறகு ரவி மோகனையும் பலர் மீண்டும் விமர்சிக்க தொடங்கி இருக்கிறார்கள். அதற்கெல்லாம் ரவி மோகன் பதிலடியாக ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
ஒரு நாள் உங்களுக்கு புரியும்..
"நான் அமைதியாக என் வாழ்க்கையை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். இதை மீண்டும் சொல்ல விரும்புகிறேன். பெண்கள் மட்டும் தான் எப்போதும் சரி என நீங்கள் எல்லோரும் நினைக்கிறீர்கள். ஆனால் ஆண்கள் தான் இங்கே அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். அது நீதித்துறைக்கும் தெரியும்."
"ஒரு நாள் என் என்னுடைய மனது உங்களுக்கு தெரியும். நான் நேசிப்பவர்களுக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறேன் என அப்போது தெரியும். ஒருவனை வாழ விடுங்கள், உங்கள் கேவலமான எண்ணங்களை உங்களுடனே வைத்துக்கொள்ளுங்கள். நான் மீண்டும் என் வாழ்க்கையை பார்க்க போகிறேன்" என ரவி மோகன் பதிவிட்டுள்ளார்.
View this post on InstagramA post shared by Ravi Mohan (@iam_ravimohan)
View this post on InstagramA post shared by Ravi Mohan (@iam_ravimohan)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by Ravi Mohan (@iam_ravimohan)
Source: Entertainment News