சைத்ரா ரெட்டி

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சைத்ரா ரெட்டி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்கிற சீரியலில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார்.



கயல் சீரியலில் நடிக்க நடிகை சைத்ரா ரெட்டி ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம், எவ்வளவு தெரியுமா... - Related Image

இதை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்து சின்னத்திரையில் தனக்கெனத் தனி இடத்தை பிடித்தார்.

இதன்பின், கதாநாயகியாக சைத்ரா ரெட்டி களமிறங்கிய சீரியல்தான் கயல். சன் டிவியில் கடந்த 2021ஆம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சம்பளம்

இந்த நிலையில், கயல் சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு நடிகை சைத்ரா ரெட்டி வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கயல் சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ. 45 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரை சைத்ரா ரெட்டி சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

இதன்மூலம், சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரங்களில் ஒருவராக சைத்ரா ரெட்டி உள்ளார். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.