அய்யனார் துணை

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலுக்கு அறிமுகமே தேவையில்லை.



தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க - Related Image

இந்த சீரியலில் தற்போதுபல்லவன்போலீசில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக நிலா சொந்த பிசினஸ் தொடங்க ரூ. 5 லட்சம் தேவை என்பதால் அந்த பணத்தை ஏற்பாடு செய்ய குடும்பமாக முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களின் முயற்சி விரைவில் கைகொடுக்குமா? நிலா சொந்தமாக பிசினஸ் தொடங்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

TRP-யில் உச்சத்தில் இருக்கும் அய்யனார் துணை சீரியலில் கதாநாயகியாக நடிகை மதுமிதா நடித்து வருகிறார். இவர் இதற்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியாக நடித்து தமிழில் பிரபலமானார்



தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க - Related Image

அய்யனார் துணை சீரியல் மூலம் சின்னத்திரையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை மதுமிதா, தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பதிவு செய்வார்.

தஞ்சாவூர் பெரிய கோவில்



தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க - Related Image

அந்த வகையில் தற்போது புகழ்பெற்ற 1000 வருடங்களுக்கும் மேல் பழமையான தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள மதுமிதா அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அவருடன் அய்யனார் துணை சீரியலில் வானதி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை அக்ஷயாவும் சென்றுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்: