


ராஷ்மிகா மந்தனா
இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் அடுத்ததாக ரணபலி, Cocktail 2, மைசா, அல்லு அர்ஜுன் 22, அனிமல் பார்க் மற்றும் புஷ்பா 3 ஆகிய திரைப்படங்கள் வெளிவரவுள்ளன.

கடந்த மாதம் நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது.
மனம் திறந்து பேசிய நடிகை
இந்த நிலையில், திருமணத்திற்கு பின் நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு சிறந்த நடிகை என்கிற விருது கிடைத்துள்ளது. சமீபத்தில் Telangana Gaddar Film Awards நடைபெற்றது. இதில் 'தி கேர்ள் ஃபிரெண்ட்' திரைப்படத்திற்காக நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு சிறந்த நடிகை விருது கிடைத்திருக்கிறது.
விருது பெற்ற நடிகைராஷ்மிகாஅந்த மேடையில் பேசியது, "ஒரு காலத்தில் என்னுடைய நடிப்புக்காக கிண்டல் செய்யப்பட்டேன். இப்போது என் நடிப்புக்காக விருது கிடைத்துள்ளது, மிகப்பெரிய பாதையை கடந்து வந்ததை போல் உணர்கிறேன். 'தி கேர்ள் ஃபிரெண்ட்' திரைப்படத்திற்காக விருது கிடைத்துள்ளது என்பது மிக சிறப்பானது, ஏனென்றால் அது போன்ற நிறைய படங்கள் வருவதை ஊக்குவிக்கும், இப்படத்தை கொடுத்த ராகுலுக்கு நன்றி" என கூறியுள்ளார்.
Source: Entertainment News