அய்யனார் துணை

கதையில் பல்லவன் தனது தோழியுடன் பேசிக்கொண்டு இருப்பதற்காக நண்பனின் ஹோட்டலுக்கு செல்கிறார்.



வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் - Related Image

அந்த நேரம் பார்த்து ஹோட்டலில் போதை பொருள் பயன்பாடு இருக்கிறது என போலீஸ் வர சந்தேகத்தின் பெயரில் பல்லவன் மற்றும் அவரது தோழி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.

அதை சோழன் பார்த்துவிட எப்படியோ தனது அண்ணன் சேரன் உதவியுடன் பல்லவனை வீட்டிற்கு அழைத்து வந்துவிடுகின்றனர். நேற்றைய எபிசோடில், அண்ணன்கள் மாறி மாறி பல்லவனை அடித்துவிட்டனர்.



வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் - Related Image

எபிசோட்

இன்றைய எபிசோடில், பல்லவன் சேரனிடம் எவ்வளவு கெஞ்சியும் அவர் பேசுவதாக தெரியவில்லை. இனி நான் பல்லவனிடம் பேச மாட்டேன், ஆனால் அவருக்கு தேவையான பணம் என எல்லா விஷயத்தை எப்போதும் போல செய்வேன் என கூறுகிறார்.

பின் சேரன், நிலாவிடம் வேலை குறித்து பேசும்போதும் சோழன் சொந்தமாக கம்பெனி தொடங்குவது குறித்தும் ரூ. 5 லட்சம் வேண்டும் என்பதையும் கூறுகிறார். இதனால் பாண்டி வீட்டை அடமானம் வைக்கலாம் என யோசனை கூற அனைவரும் ஓகே என்கிறார்கள்.

அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த வானதி, பாண்டியிடம் இதுகுறித்து சண்டை போடுகிறார். உங்கள் அண்ணி என்றதும் வீட்டை அடமானம் வைக்கிறீர்கள், எனக்கு என்றால் இப்படி செய்திருப்பீர்களா என சண்டை போடுகிறார்.

பாண்டி நீ பேசாமல் இருந்தது நிஜமாகவே வருத்தமாக இருந்தது, ஆனால் இப்போது என் பேசுகிறாய் என்று இருப்பதாக கூற அவர் வழக்கம் போல் கோபப்படுகிறார்.