விஜய் மற்றும் த்ரிஷா ஜோடியாக வந்தது பற்றி பல பிரபலங்கள் விமர்சித்து இருக்கின்றனர். நடிகர் பார்த்திபன் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் த்ரிஷா போட்டோவை பார்த்து அவர் சொன்ன கருத்து சர்ச்சையாகி இருக்கிறது.

"குந்தவையை வீட்டிலேயே குந்த வைத்தால் நல்லது" என த்ரிஷாவை பார்த்திபன் தாக்கி பேசினார்.

த்ரிஷா பதிலடி

"நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நடந்ததை என்னிடம் சொன்னார்கள். என் பெயர் மற்றும் போட்டோவை கடைசி நிமிடத்தில் சேர்க்கும்படி அவரது அசிஸ்டன்ட் மூலமாக சொல்லி சேர்க்க வைத்திருக்கிறார்."

"மைக்கை பிடித்து இப்படி கமெண்ட் செய்தால் அது புத்திசாலித்தனம் அல்லது நகைச்சுவை ஆகாது. அது முட்டாள்தனத்தை இன்னும் சத்தமாக சொல்கிறது. இப்படி அறிவில்லாமல் பேசியது அந்த நபரை பற்றி தான் காட்டுகிறது, என்னை பற்றி அல்ல" என த்ரிஷா காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

I was informed by the organisers of a recent event that my name and picture were included at the last minute at the request of an individual conveyed through his assistant.A microphone doesn’t make a comment intelligent orhttps://t.co/QG0bsLLDrIjust makes stupidity…— Trish (@trishtrashers)March 8, 2026

I was informed by the organisers of a recent event that my name and picture were included at the last minute at the request of an individual conveyed through his assistant.A microphone doesn’t make a comment intelligent orhttps://t.co/QG0bsLLDrIjust makes stupidity…