விமல் நடிப்பில் இயக்குநர் இயக்குநர் கேந்திரன் முனியசாமி இயக்கத்தில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் 'வடம்'. இப்படத்தில் பால சரவணன், முனீஸ்காந்த் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். வாங்க, படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம்.

கதைக்களம்



வடம் திரைவிமர்சனம் - Related Image

படத்தின் ஆரம்பத்திலேயே நட்ராஜ் வீட்டில் இரண்டு காளை கண்ணு பிறக்கிறது. அதை மஞ்சு விரட்டுக்கு தயார் செய்யும் போது இரண்டுமே அதற்கு ஏற்றது இல்லை என நினைத்து ஒன்றை தன் மச்சினிச்சுக்கும், மற்றொன்றை அடிமாட்டுக்கும் விற்கிறார்.

அந்த நேரத்தில் எப்போதும் ஊருக்கும், மாடுகளுக்கு கூட நல்லது நினைக்கும் நரேன் அந்த கன்றை காப்பாற்றி தன் வீட்டில் வளர்க்கிறார். அந்த மாட்டை மஞ்சு விரட்டுக்கு நரேனின் மகனான விமல் தயார் செய்து பல வெற்றிகளை பெறுகிறார்.



வடம் திரைவிமர்சனம் - Related Image

அதே நேரத்தில் திருவிழாவில் தன் தந்தையிடம் தகறாரு செய்த ஊர் பெரியவர் ஒருவரின் வேட்டியை விமல் அவிழ்த்து அவமானப்படுத்துகிறார். இதனால் விமலை எப்படியாவது கொல்ல வேண்டும் என அவரும் கங்கனம் கட்டுகிறார்.

இந்த நேரத்தில் நரேன் குடும்பத்திற்கு ஆவாத ஒருவர் விமலை கொல்ல, பகையாளியிடமே வர விமலுக்கு ஸ்கெட்ச் போட, விமல் ஒரு நாள் தன் காதலியை சந்திக்க போகும் போது கொல்ல வர, எல்லோரையும் விமல் அடித்து தும்சம் செய்ய, எதிர்பாரத விதமாக விமலுக்கு ஒரு துரோகம் நடக்கிறது, ஏன் இந்த துரோகம், விமல் இந்த எதிரிகளிடமிருந்து தப்பித்தாரா, அந்த துரோகத்துக்கு காரணம் என்ன என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

விமல் கிராமத்து படம் என்றாலே அவருக்கு 10 பாலுக்கு ஒரு ரன் அடித்தால் வெற்றி என்பது போல தான, மீசையை முறுக்கிவிட்டு கையை மடித்துவிட்டு, வேட்டையை கட்டி களம் இறங்கி விடுவார், இந்த படத்திலும் எந்த குறையும் இல்லாமல் கலக்குகிறார்.

இவருடன் கூடுதல் பலமாக கிராமத்து படம் என்றாலே இருக்கும் நரேன், பாலசரவணன், முனிஷ்காந்த், நட்டி என பலரும் தங்கள் பங்கை சிறப்பாகவே செய்துள்ளனர்.

இந்த படத்தின் களமே மஞ்சு விரட்டு பற்றியது தான், அதனாலே மாடுகள் அதை சுற்றி நடக்கும் சந்தோஷம், வன்மம், பழி வாங்கல் என எடுத்துள்ளனர்.

அதிலும் மாடு பிடிக்கும் காட்சிகள் எல்லாம் எடுத்த விதமெல்லாம் அத்தனை யதார்த்தம், மிக சூப்பராக படம் பிடித்துள்ளனர்.

இத்தனை சிறப்பம்சம் இருந்தும் படத்தில் ஒரு விறுவிறுப்பான களம் மிஸ் ஆகியுள்ளது, இந்த கதையில் கண்டிப்பாக அப்படியான காட்சிகள் வைத்திருக்க இடமிருந்தும் தவற விட்டுள்ளனர்.

அதிலும் இது தான் பகை என்று நினைத்தால், கதை இரண்டாம் பாதியில் விமல் Vs நட்டி என போகிறது, சரி இது கதை என நினைத்தால் அப்படியே முனிஷ்காந்த் பக்கம் போவது பார்ப்பவர்களுக்கு எதை தொடர்வது என்ற குழப்பம் வருகிறது.

டெக்னிக்கல் ஆக ஒளிப்பதிவு டாப் நாச் என்று தான் சொல்ல வேண்டும், அந்த மஞ்சு விரட்டு காட்சிகளை படமாக்கிய விதமே அருமை. டி.இமான் இசையில் காளைக்கு கூட மாஸ் பாட்டு, நல்லாருக்குயா என சொல்ல வைக்கின்றார்.

க்ளாப்ஸ்

கிராமத்து மஞ்சு விரட்டை கண்முன் காட்டியது.

நடிகர்களின் யதார்த்த நடிப்பு

பல்ப்ஸ்

களம் இருந்தும் விறுவிறுப்பான காட்சிகளை அமைக்காதது.

மொத்தத்தில் இந்த வடம் கிராமத்து பட விரும்பிகளுக்கு ஓர் ஒன் டைம் வாட்ச்.