


எதிர்நீச்சல்
ஜனனி கர்ப்பம் என்கிற செய்தியை கேள்விப்பட்டு அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், அவர் பலவீனமாக இருக்கிறார், அவரை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர் கூறியிருந்தார்.

இதனால் ஜனனியை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, ஜனனிக்கு வந்த பிசினஸ் வாய்ப்பை கூட சக்தி வேண்டாம் என கூறிவிட்டார். இதனால் சக்தி - ஜனனி இடையே சற்று வாக்குவாதம் ஏற்பட்டது.
ஈஸ்வரியின் உடல்நிலை
இந்த நிலையில், இன்று எதிர்நீச்சல் சீரியலில் நடக்கவிருக்கும் விஷயங்கள் குறித்து புரோமோ வெளியாகியுள்ளது. இதில், ஜனனியை சக்தி கவனமாக பார்த்துக்கொள்கிறார். இந்த மகிழ்ச்சியான தருணங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈஸ்வரியை சந்திக்க ரேணுகா மற்றும் நந்தினி செல்கின்றனர்.
இவர்கள் இருவரும் செல்லும் போது கதிர் மற்றும் ஞானம் பார்த்துவிட்டு எங்க போறீங்க என கேட்கவும், ஈஸ்வரி அக்காவை மருத்துவமனைக்கு சென்று பார்க்க போகிறோம் என கூறுகின்றனர். எப்போதும் கோபத்துடன் பேசும் கதிர் மற்றும் ஞானம் இருவரும், சரி போய்விட்டு வாங்க என கூறுகிறார்கள்
இதன்பின் மருத்துவமனைக்கு வந்த ஈஸ்வரியின் உடல்நிலை குறித்து மருத்துவரிடம் விசாரிக்கிறார்கள்.
ஈஸ்வரியின் உடல்நிலையில் நன்றாக முன்னேற்றம் உள்ளது. ஆனால், நீங்கள் ஒரு மிகப்பெரிய தொகையை கட்டவேண்டும் என மருத்துவர் கூறுகிறார். இதை கேட்டவுடன் ரேணுகா மற்றும் நந்தினி அதிர்ச்சியடைகின்றனர். சரி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
View this post on InstagramA post shared by @ethirneechal___fp
View this post on InstagramA post shared by @ethirneechal___fp
View this post on Instagram
View this post on Instagram
A post shared by @ethirneechal___fp
Source: Entertainment News