தாய்கிழவி

அறிமுக இயக்குனர்கள் சினிமாவில் களமிறங்கும் போதே மிகவும் தரமான கதைக்களத்துடன் இறங்குகிறார்கள்.



தமிழகத்தில் மட்டுமே ராதிகாவின் தாய்கிழவி படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? - Related Image

அப்படி சிவகார்த்திகேயன் கண்ணில் பட்ட ஒரு அறிமுக இயக்குனர் தான் சிவகுமார் முருகேசன். ஒரு பாட்டி கதைக்களத்தை வைத்து முழு கதையை இயக்கி மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

சிவகார்த்திகேயனின் SK புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராதிகா சரத்குமார், அருள் தாஸ், சிங்கம்புலி, பால சரவணன், இளவரசு, ரேச்சல் ரெபேக்கா உள்ளிட்ட பலர் நடிக்க தாய்கிழவி படம் வெளியாகியுள்ளது.

சுமார் 10 நாட்களில் ரூ. 50 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டாக மாறியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்

படம் மக்களிடம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆக வசூலும் எந்த குறையும் இல்லாமல் நடக்கிறது. இதுவரை படம் ரூ. 62 கோடி வரை வசூல் வேட்டை நடத்த தமிழகத்தில் மட்டுமே ரூ. 46 கோடி வரை வசூலித்துள்ளது.