அய்யனார் துணை

விஜய் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ள சீரியல் தான் அய்யனார் துணை. 4 அண்ணன்-தம்பிகளின் கதையாக இருந்தாலும் ஒவ்வொரு வாரமும் கதைக்களம் சுவாரஸ்யமாக அமைந்து வருகிறது.



பல்லவனுக்கு ஏற்பட்ட நிலைமை, கதறி கதறி அழும் சேரன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் - Related Image

இப்போது கதையில் பல்லவன் தனது தோழியை ஹோட்டலுக்கு அழைத்து செல்ல அங்கு எதர்சையாக போலீஸ் போதை பொருள் இந்த ஹோட்டலில் இருப்பதாக தகவல் வர அவர்கள் விசாரிக்கிறார்கள்.

அதில் பல்லவன் சிக்கி ஜெயிலுக்கு அழைத்து செல்லப்படுகிறார்.

எபிசோட்

இன்றைய எபிசோடில், சேரன் தனக்கு தெரிந்த எம்எல்ஏவை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து எப்படியோ பல்லவனை வீட்டிற்கு அழைத்து வந்துவிடுகிறார்கள்.

வீட்டிற்கு வந்த பல்லவனை சேரன் சரமாரியாக அடிக்கிறார், இவன் ஏன் இப்படி ஆனான் என கதறி கதறி அழுகிறார். சோழனும் அடித்து திட்ட பாண்டியும் திட்டுகிறார். பல்லவன், நிலாவிடம் நீங்களாவது புரிந்துகொள்ளுங்கள் என கேட்க அவர் பொறுமையாக அவன் செய்த தவறை எடுத்துக் கூறுகிறார்.

நடேசனும் பல்லவனை மிகவும் கோபமாக திட்டிவிட்டு செல்கிறார்.

கடைசியில் பல்லவன் தனது அண்ணன்களிடம் நான் தவறான எண்ணத்தில் ஹோட்டலுக்கு அழைத்து செல்லவில்லை, ஆனால் நான் செய்தது தவறு தான் என புலம்புகிறார்.