தாய் கிழவி

2026ஆம் ஆண்டு மூன்று மாதங்களை கடந்துள்ள நிலையில், இதுவரை சில சூப்பர்ஹிட் திரைப்படங்கள் மட்டுமே தமிழில் இருந்து வெளியாகியுள்ளது. அதில் ஒன்றுதான் தாய் கிழவி. இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்க, நடிகை ராதிகா சரத்குமார் கதையின் நாயகியாக நடித்திருந்தார்.



தாய் கிழவி படம் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இறுதி வசூல் விவரம் - Related Image

மேலும், இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்க, நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால், முதல் நாளில் இருந்தே வசூலில் தாய் கிழவி திரைப்படம் பட்டையை கிளப்பி வருகிறது.

தமிழகத்தில் இறுதி வசூல்

இந்த நிலையில், தமிழ்நாட்டில் தாய் கிழவி இதுவரை எவ்வளவுவசூல்செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை தமிழ்நாட்டில் ரூ. 61.8 கோடி வசூல் செய்துள்ளது.

இதன்மூலம் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில், 2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை படைத்துள்ளது. மேலும், தமிழகத்தில் இதுவே இப்படத்தின் இறுதி வசூலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.