Dude

கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் Dude. பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ ஆகியோர் இணைந்து நடித்திருந்த இப்படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கியிருந்தார். இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தனர்.



Dude பட இயக்குநரின் அடுத்த படம்.. ஹீரோ இந்த முன்னணி நடிகரா? - Related Image

காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் கடும் சர்ச்சையை சந்தித்தது. பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். அதையெல்லாம் தாண்டிDudeதிரைப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இதனை தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அடுத்த படம்

Dude படத்தை தொடர்ந்து இயக்குநர் கீர்த்திஸ்வரன் அடுத்ததாக யாரை வைத்து தனது இரண்டாவது படத்தை இயக்கப்போகிறார் என்கிற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், நடிகர் சிம்புவுடன் இயக்குநர் கீர்த்திஸ்வரன் கைகோர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஸ்கிரிப்ட் ஒர்க் தற்போது நடந்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.