

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி முதல் முறையாக பாலிவுட் பக்கம் காலடி எடுத்து வைத்துள்ளார்.
இவர் நடிப்பில் உருவாகியுள்ள முதல் இந்தி திரைப்படம் 'Ekdin'. இப்படத்தை சுனில் பாண்டே இயக்கியுள்ளார். அமீர் கானின் மகன் ஜுனைத் கான் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். காதல் கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இப்படம் வருகிற மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த நிலையில், தற்போது ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த, 'Ek din' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இதோ பாருங்க:
'Ek din' திரைப்படத்தை தொடர்ந்து சாய் பல்லவி நடித்து வரும் பாலிவுட் திரைப்படம் ராமாயணா. இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இதில் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Entertainment News