வித் லவ் படம்

சினிமாவில் இப்போதெல்லாம் அதிக பட்ஜெட், பெரிய நடிகரின் படம் என இல்லாமல் சிறிய பட்ஜெட்டில் தயாராகும் படங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள்.



அபிஷன் ஜீவிந்த் நடித்துள்ள வித் லவ் படத்தின் OTT ரிலீஸ் எப்போது? - Related Image

அப்படி சமீபத்தில் டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடிக்க கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் வித் லவ்.

மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடிக்க ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.

அபிஷனிடம் உதவி இயக்குனராக இருந்த மதன் என்பவர் இயக்கிய இப்படம் காதல் கதையை மையமாக கொண்ட கதை.

ஓடிடி ரிலீஸ்

பள்ளிகால கதையுடன் கூடிய நகைச்சுவை காதல் படமாக உருவான இப்படத்திற்கும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

திரையரங்குகளில் வெற்றிநடைபோட்ட இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தான் வெளியாகியுள்ளது. அதாவது வருகிற மார்ச் 6ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.