
குந்தவை வீட்டிலேயே குந்த வைத்தால் நல்லது என நடிகர் பார்த்திபன் பேசியது சர்ச்சை ஆன நிலையில், அறிவில்லாத பேச்சு என த்ரிஷா அவருக்கு பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி பார்த்திபன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
காசு வாங்கல..
நான் த்ரிஷா பற்றி விருப்பப்பட்டு கேட்டு அப்படி பேசினேன் என்பது பொய். த்ரிஷா போட்டோ வந்ததும் நான் திகைத்துவிட்டேன். நான் யாருக்கும் அடிமையாக இல்லை, காசு வாங்கிட்டு அப்படி பேச போகவில்லை.
காசு வாங்கிட்டு நான் எந்த காட்சியிலும் போய் சேரப்போறது இல்லை.
நானே போட்டோ போடுங்க பேசுகிறேன் என சொல்கிறேன் என்றால், மகளிர் தினத்தன்று நான் வேலு நாச்சியார், டயானா சார்ள்ஸ், மதர் தெரசா பற்றி பேச ஆசைப்பட்டிருக்கலாம். இப்படி இவரை பற்றி பேச ஆசைப்பட்டேன் என சொல்வது சரியல்ல.
குந்தவை குந்தவை என பிரியங்கா அருகில் சொல்லிக்கொண்டே இருந்தாங்க. 40 வயது ஆன த்ரிஷா வீட்டிலேயே இருந்து கொண்டு விஜய்யை மட்டும் அனுப்பி இருந்தால் நன்றாக இருக்குமே என பத்திரிகையாளர் ஒருவர் பேசி இருந்தார்.
விஜய்க்கு பாதிப்பு.. என் ஆதங்கம்
கரூர் பிரச்சனையில் கூட அவருக்கு இந்த அளவுக்கு பாதிப்பு வரவில்லை. இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்திய நிகழ்ச்சிக்கு அவர் வராமல் இருந்திருக்கலாம் என தான் அப்படி பேசினேன்.
அது உண்மையிலேயே ஒரு பெரிய ஆதங்கம்.
நான் பிரச்சனைகளை விரும்பாதவன். அதனால் அந்த மீடியாவுக்கு மெசேஜ் செய்து நீக்கிவிடும்படி சொல்லிவிட்டேன்.
நான் ஒரு நபரை பற்றி தான் சொன்னேன், எல்லா பெண்களையும் வீட்டில் இருக்கும்படி சொன்னேன் என மாற்றிவிட்டார்கள்.
"சமீப காலத்தில் அவரை பற்றி வந்த மோசமான விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் சொல்லாமல், எனக்கு மட்டுமே கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்" என த்ரிஷாவை தாக்கி பேசி இருக்கிறார் பார்த்திபன்.
Good night friendshttps://t.co/pF52GZ8nqi— Radhakrishnan Parthiban (@rparthiepan)March 9, 2026
Good night friends https://t.co/pF52GZ8nqi
— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 9, 2026
Good night friendshttps://t.co/pF52GZ8nqi
Source: Entertainment News