

வித்யா பாலன்
கடந்த 2005ம் ஆண்டு வெளியான பிரினீதா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வித்யா பாலன்.

பா, கஹானி உள்ளிட்ட பல்வேறு படங்களில் அவர் நடித்திருந்தாலும் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட தி டர்ட்டி பிக்சர் படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.
தமிழில் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். அதன்பின் தமிழில் எந்த படங்களும் கமிட்டாகவில்லை, ஹிந்தியில் படங்கள் நடிக்கிறார்.
கியூட் ரீல்ஸ்
சமூக வலைதளங்களில் மக்கள் நிறைய படங்களின் காட்சிகளுக்கு, பாடல்களுக்கு எல்லாம் ரீல்ஸ் செய்து வெளியிடுவார்கள். அதிலும் பிரபலங்கள் ஏதாவது ரீல்ஸ் செய்துவிட்டார்கள் என்றால் அது உடனே வைரலாகிவிடும்.
அப்படி தான் இப்போது ஒரு நடிகை கியூட்டாக நடித்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவான்களாக கொண்டாடப்படும் செந்தில்-கவுண்டமணியின் ஒரு காமெடி காட்சிக்கு கியூட்டாக ரீல்ஸ் நடித்து வீடியோ வெளியிட்டுள்ளார் பாலிவுட் நடிகை வித்யா பாலன்.
அவரின் அந்த வீடியோவிற்கு கீழ் தமிழ் சினிமா ரசிகர்கள் சூப்பர் என கமெண்ட் செய்வதோடு லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
View this post on InstagramA post shared by Vidya Balan (@balanvidya)
View this post on InstagramA post shared by Vidya Balan (@balanvidya)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by Vidya Balan (@balanvidya)
Source: Entertainment News