


காற்றுக்கென்ன வேலி
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு சீரியல் காற்றுக்கென்ன வேலி.

புதுமுக கலைஞர்கள் நடிக்க ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் 809 எபிசோடுகள் ஓடியிருக்கிறது.
பிரியங்கா மற்றும் சூர்ய தர்ஷன் என இருவரும் முதன்முறையாக ஜோடியாக நடிக்க தொடர் ஒளிபரப்பாகி வர இடையில் நாயகன் மாற்றம் நடந்தது.
சூர்ய தர்ஷனுக்கு பதிலாக சுவாமிநாதன் நடித்து வந்தார். கல்லூரி காதலை மையப்படுத்தி தொடர் ஒளிபரப்பாக ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது.
கடைசியில் சீரியல் கடந்த 2023ம் ஆண்டு முடிவுக்கும் வந்தது.
ஒர்க் அவுட்
இந்த தொடரில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு நன்கு பரீட்சயமான நடிகையாக வலம் வந்தார் பிரியங்கா குமார்.
கன்னட சினிமாவில் பிஸியாக நடித்துவரும் இவர் காற்றுக்கென்ன வேலி சீரியலுக்கு பிறகு தமிழ் பக்கம் வரவில்லை. எப்போது இன்ஸ்டாவில் ஆக்டீவாக போட்டோ ஷுட் புகைப்படங்கள் வெளியிடுவது என இருக்கும் பிரியங்கா தற்போது தனது ஒர்க் அவுட் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அவரின் லேட்டஸ்ட் ஒர்க் அவுட் வீடியோவிற்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்து வருகிறது.
View this post on InstagramA post shared by P R I Y A N K A K U M A R (@priyankaa_kumar1)
View this post on InstagramA post shared by P R I Y A N K A K U M A R (@priyankaa_kumar1)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by P R I Y A N K A K U M A R (@priyankaa_kumar1)
Source: Entertainment News