யூத்

ஜனவரி மாதம் தலைவர் தம்பி தலைமையில், பிப்ரவரி மாதம் வித் லவ் மற்றும் தாய் கிழவி, அதனை தொடர்ந்து மார்ச் மாதம் வெளிவந்த யூத் திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு மாபெரும் வெற்றியைப் பெற்று கொடுத்துள்ளது.



12 நாட்களில் யூத் திரைப்படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா - Related Image

கென் கருணாஸ் இப்படத்தில் ஹீரோவாக மட்டுமின்றி இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார். இவருடன் இணைந்து சுராஜ், தேவதர்ஷினி, நளினி என அனுபவமிக்க நட்சத்திரங்கள் ஒரு பக்கமும், மீனாட்சி, அனிஷ்மா அனில்குமார் என இளம் நடிகைகள் மறுபக்கமும் நடித்துள்ளனர்.

வசூல்

டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நல்ல எதிர்பார்ப்புடன் வெளிவந்த யூத் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.

இந்த நிலையில், 12 நாட்களில் யூத் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 12 நாட்களில் இப்படம் ரூ. 55 கோடி வசூல் செய்துள்ளது.