யூத்

கென் கருணாஸ் இயக்கி, ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் யூத். இப்படத்தை பார்வதா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.



15 நாட்களில் யூத் திரைப்படம் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா - Related Image

இப்படத்தில் சுராஜ், தேவதர்ஷினி, நளினி, மீனாட்சி, அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் நடித்திருந்தனர்.

இளைஞர்களை கவரும் வகையில் உருவாகியிருந்த இப்படம் முதல் நாளில் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கென் கருணாஸை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, கென் கருணாஸின் அடுத்த திரைப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

வசூல்

யூத் திரைப்படத்தின் வசூல் குறித்து முதல் நாளில் இருந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் 15 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக கடந்திருக்கும்யூத், உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 15 நாட்களில் உலகளவில் ரூ. 60 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.