


லெஜண்ட் சரவணன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர். 2022ஆம் ஆண்டு வெளிவந்த லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த லெஜண்ட் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. கலவையான விமர்சனங்களையும் சந்தித்தது.
லீடர்

முதல் படத்தில் தான் சந்தித்த விமர்சனங்களை எல்லாம் சரி செய்து இரண்டாவது திரைப்படத்தில் செம மாஸான கம்பேக் கொடுத்துள்ளார் லெஜண்ட் சரவணன். ஆம், இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த லீடர் திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது.
இப்படத்தை இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்க, பாயல் ராஜ்புட், ஆண்ட்ரியா, ஷ்யாம் ஆகியோர் நடித்திருந்தனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வெளியான லீடர் திரைப்படம் முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
வசூல்
இந்த நிலையில், 3 நாட்களில் உலகளவில் இப்படம் செய்துள்ளவசூல்குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 3 நாட்களில் லீடர் திரைப்படம் ரூ. 6 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Entertainment News