நடிகர் விஜய் பற்றி தான் தற்போது ஒட்டுமொத்த தமிழ்நாடும் பேசிக்கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் அவர் அரசியல் பிரச்சாரத்தை தொடங்கி இருப்பதும், அவருக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளும் தான்.

தனது அரசியல் பிரச்சாரத்திற்கு போலீஸ் சரியான பாதுகாப்பு அளிக்க மறுப்பதாக விஜய் குற்றம்சாட்டி இருக்கிறார்.



விஜய்யின் கடந்த 5 ஆண்டு மொத்த வருமானம்.. எத்தனை கோடி பாருங்க! - Related Image

மேலும் விஜய் தனது சொத்து விவரங்களை வேட்புமனுவில் குறிப்பிட்டு இருக்கும் நிலையில் அதன் விவரங்களும் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறி இருக்கிறது.

5 ஆண்டு வருமானம்

நடிகர் விஜய் கடந்த 5 ஆண்டுகளில் சம்பாதித்த பணம் எவ்வளவு என்பதையும் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

5 நிதி ஆண்டுகளில் தனது மொத்த வருமானம் ரூ.734 கோடி என விஜய் குறிப்பிட்டுள்ளார். சுயதொழில் (நடிப்பது), வட்டி மற்றும் சொத்துக்களின் வாடகை வருவாய் மூலமாக இதை அவர் சம்பாதித்ததாக கூறியுள்ளார்.