மைக்கேல்

நடனம் என்றால் உடனடியாக அனைவரின் நினைவிற்கு வரும் ஒரே முகம் மைக்கேல் ஜாக்சன். இவருடைய வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம்தான் 'மைக்கேல்'.



6 நாட்களில் மைக்கேல் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா - Related Image

இயக்குநர் Antoine Fuqua இப்படத்தை இயக்க, மைக்கேல் ஜாக்சனின் அண்ணன் மகன் ஜாபர் ஜாக்சன் ஹீரோவாக நடித்திருந்தார். அச்சு அசல் அப்படியே மைக்கேல் ஜாக்சன் போலவே நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.

வசூல்

கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வரும் நிலையில், 6 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், 6 நாட்களில் உலகளவில் மைக்கேல் திரைப்படம் ரூ. 2600 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்து சாதனை படைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.