


சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி - மனோஜ் விவாகரத்து வழக்கு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், விவாகரத்து விரைவில் கிடைத்துவிடும் என மனோஜ் மற்றும் விஜயா எதிர்பார்த்தனர்.

ஆனால், தற்போது விவாகரத்து வழக்கை 6 மாதத்திற்கு தள்ளிவைத்துவிட்டார் நீதிபதி. 6 மாதத்திற்கு பிறகும் ரோகிணியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என மனோஜ் கூறினால் கண்டிப்பாக விவாகரத்து தருகிறேன் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
அதுவரை ரோகிணியையும், அவருடைய மகனையும் மனோஜ் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், அவர்களுக்கு தனி வீடு ஒன்றை எடுத்து கொடுத்து தங்க வைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், ரோகிணிக்கு மாதம் ரூ. 25,000 தர வேண்டும், இதை எதுவும் மனோஜ் செய்யவில்லை என்றால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டு இருக்கிறார்.
நிச்சயதார்த்தம்
விவாகரத்து தீர்ப்பு 6 மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது எனநீதிபதிஉத்தரவிட்டுள்ள நிலையில், இது வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிய கூடாது என மனோஜிடம் விஜயா கூறுகிறார். இதை மறைத்து மனோஜுக்கு நிச்சயதார்த்தம் செய்கின்றனர். ஆம், மனோஜுக்கும் வெளிநாட்டு பெண்ணிற்கும் வீட்டிலேயே நிச்சயதார்த்தம் நடக்கிறது. இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Source: Entertainment News