ஆஷா போஸ்லே

உலக புகழ்பெற்ற பாடகர்களில் ஒருவர் ஆஷா போஸ்லே. இவர் 1951ஆம் ஆண்டு பின்னணி பாடகியாக அறிமுகமானார்.



பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே 92 வயதில் காலமானார்.. - Related Image

இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி, பெங்காலி, தெலுங்கு என பல்வேறு மொழிகளில் கிட்டதட்ட 12,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

தமிழில் இளையராஜா இசையில் வெளிவந்த செண்பகமே, நீ பார்த்த பார்வை போன்ற பாடல்களை பாடகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலமானார்

92 வயதான பின்னணி பாடகி ஆஷா போஸ்லே நேற்று உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இதயப் பிரச்சனை மற்றும் பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்ததன் காரணமாக சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

இவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கலை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.