துருவ் விக்ரம்

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் பைசன். இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் வெற்றியடைந்தது.



பைசன் படத்தின் மாபெரும் வெற்றி... துருவ் விக்ரமின் அடுத்த படம்! வெளிவந்த அப்டேட் - Related Image

இப்படத்தில் கிட்டான் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக கடுமையாக உழைத்திருந்தார் துருவ் விக்ரம். அதற்கான தனது உடலைக்கூட வருத்திக்கொண்டு நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பைசன் திரைப்படத்தை தொடர்ந்து துருவ்விக்ரம்யாருடைய இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில், துருவ் நடிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

வெளிவந்த அப்டேட்

அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில்தான் அடுத்து துருவ் விக்ரம் நடிக்கவுள்ளாராம். கரண் அரவிந்த் குமார் இதற்கு முன் துருவ் விக்ரம் நடித்த ஆதித்யா வர்மா படத்தில் துணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். மேலும், இவர் கருப்பு திரைப்படத்தின் எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார்.

இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், இப்படத்திற்கு சாய் அப்யங்கரை இசையமைக்க வைக்க முயற்சி செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

மேலும், இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கப்போவதாக கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.