பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை ஏமாற்றிய காரணத்தினால் தங்கமயில் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதுமட்டுமின்றி தற்போது மயிலிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்கிற முடிவில் சரவணனும், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் உள்ளது.



தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ - Related Image

இந்த சமயத்தில் தங்கமயில் கர்ப்பமானார்.

தான் கர்ப்பமாக இருப்பதை, முதலில் சரவணனிடம் கூறினார். ஆனால், சரவணன் இது யாருடைய குழந்தை என கேட்டதும் தங்கமயில் மனமுடைந்து போனார்.

புரோமோ

கர்ப்பமாக இருக்கும் மயிலுக்கு தன்னால் முடிந்த உதவிகளைமீனாசெய்து வந்த நிலையில், இது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்துவிட்டது. எதற்காக தங்கமயிலுக்கு உதவி செய்கிறாய் என கோமதி கேட்க, தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை மீனா கூறுகிறார்.

மயில் கர்ப்பமாக இருக்கிறார் என்பதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோகிறார்கள். மேலும் இந்த விஷயம் சரவணனுக்கு தெரியுமா என பாண்டியன் கேட்க, தெரியும், ஆனால் இது யாருடைய குழந்தை என தங்கமயிலிடம் சரவணன் கேட்டார் என்பதை வீட்டில் கூறிவிடுகிறார் மீனா.

இதனால், கோமதியிடம் அடி வாங்குகிறார் சரவணன். ஒரு பக்கம் குழந்தை, மறுபக்கம் விவாகரத்து வழக்கு, இதில் பாண்டியன் குடும்பம் என்ன முடிவு செய்யப்போகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.