யூத்

2026ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த தலைவர் தம்பி தலைமையில், வித் லவ், தாய் கிழவி, யூத் ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றியடைந்தன.



யூத் திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா.. - Related Image

இதில் கென் கருணாஸ் இயக்கி, ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம்தான்யூத். இப்படத்தில் கென்னுடன் இணைந்து சுராஜ், தேவதர்ஷினி, நளினி, மீனாட்சி, அனிஷ்மா அனில்குமார் என பலரும் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இறுதி வசூல்

இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் வசூலில் வேட்டையாடி வருகிறது. முதல் நாளில் இருந்தே யூத் திரைப்படத்தின் வசூல் விவரங்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில், 25 நாட்களை கடந்திருக்கும் இப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, யூத் திரைப்படம் மொத்தமாக உலகளவில் ரூ. 80 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதுவே இப்படத்தின் இறுதி வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.