எதிர்நீச்சல் சீரியல்

மருத்துவமனையில் இருந்து குணமாகி வந்த ஈஸ்வரி, கடந்த சில ஆண்டுகளில் நடந்த விஷயங்களை மறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறினார்கள். இதில், குணசேகரன் தன்னை அடித்ததைக்கூட அவர் மறந்துவிட்டார்.



ஜனனியிடம் கிடைத்த ஈஸ்வரியை குணசேகரன் அடித்த வீடியோ.. ஆனால்! எதிர்நீச்சல் சீரியல் புரோமோ - Related Image

இதை பயன்படுத்தும் ஆதி குணசேகரன், தன்னை நல்லவனாக ஈஸ்வரி முன் காட்டிக்கொள்கிறார். வீட்டில் உள்ளவர்களும் ஈஸ்வரிக்காக அப்படியே இருக்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால்,ஜனனிதன்னால் எதையும் மறக்கவும் மன்னிக்கவும் முடியாது என தன்னுடைய நிலைப்பாட்டில் அப்படியே இருக்கிறார்.

இன்றைய புரோமோ

ஈஸ்வரியை ஆதி குணசேகரன் அடித்த வீடியோ மட்டும் கிடைத்துவிட்டால், அவருக்கு தண்டனை வாங்கி கொடுத்திவிடலாம் என ஜனனி போராடி வருகிறார்.

அந்த வீடியோ புதிய வில்லனாக என்ட்ரி கொடுத்துள்ள ராவணனிடம் உள்ளது. அதனை தற்போது ஜனனிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அந்த வீடியோவை ஜனனி பார்த்துவிட்டு, அதனை மற்றவர்களிடம் காட்டுவதற்கு முன் அந்த வீடியோ டெலிட் செய்யப்படுகிறது. இதனால் அதிர்ச்சியில் உறைந்துபோகிறார் ஜனனி.

நீங்க யாரை அழிக்கப் பார்க்குறீங்க ஜனனியா அல்லது குணசேகரனா என ராவணனிடம் அவரது வேலை ஆள் கேள்வி கேட்கிறார்.

ஆதி முத்து குடும்பத்தில் இந்த ராவணன் மட்டும்தான் இருக்க வேண்டும், ஒருத்தருக்கு ஒருத்தரை மோதவிட்டு, அவர்களுக்கு இடையில் பிரச்சனைகளை உண்டாக்கி, கதையை காலி பண்ணப் போகிறேன் என ராவணன் கூறுகிறார்.