கருப்பு

ஆர்.ஜே. பாலாஜி - சூர்யா கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் கருப்பு. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, திரிஷா, சுவாசிகா, இந்திரன்ஸ், அனாகா மாயா, நட்டிநட்ராஜ்என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.



கருப்பு படத்தின் தமிழக திரையரங்க உரிமை.. இத்தனை கோடிக்கு விற்பனையா!! - Related Image

இப்படத்தை கடந்த ஆண்டே திரையரங்கில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், சில காரணங்களால் இப்படம் 2026க்கு தள்ளிப்போனது. வருகிற மே 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவிருக்கும் இப்படத்தை கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள்.

தமிழக உரிமை

பெரிய நடிகர்கள் படங்களின் ரிலீஸுக்கு முன், அப்படத்தின் ப்ரீ பிஸினஸ் குறித்த விவரங்கள் வெளிவரும். அந்த வகையில், சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் தமிழக திரையரங்க உரிமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், கருப்பு திரைப்படத்தின் தமிழக திரையரங்க உரிமை ரூ. 37 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். இதற்கு முன் நடந்த ப்ரீ பிஸினஸில் theatrical உரிமைகள் இல்லாமல் இப்படம் ரூ. 110 கோடி பிஸினஸ் செய்திருந்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.