அய்யனார் துணை

கதையில் கடந்த சில வாரங்களாக ஒரே பிரச்சனையாக சென்று கொண்டிருக்கிறது.



எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ - Related Image

முதலில் பாண்டி வானதியை பெண் பார்க்க செல்லாத கதைக்களம் வந்தது, அடுத்த பல்லவன் தோழியுடன் பேசிக்கொண்டிருப்பதற்காக ரூம் போட்டது, அடுத்து சோழன் நிலாவிற்காக பணம் திருடியது என பிரச்சனையாக கதைக்களம் சென்றது.

இதற்கு இடையில் சோழன்-நிலா இருவரும் சுற்றுலா சென்றது அழகான காட்சிகள் இடம்பெற்றது. அந்த நேரத்தில் சந்தாவை தேடி அவரது உறவினர்கள் வர தெய்வம் போல் வானதி இடையில் வந்து பிரச்சனையை சமாளித்துவிட்டார்.

புரொமோ

தோழியுடன் ஹோட்டல் சென்ற விவகாரத்தில் கோபமாக இருந்த சோழன், பாண்டி இருவரும் பல்லவன் பாவம் என பேசிவிட்டனர். ஆனால் சேரன் மட்டும் இன்னும் கோபமாக உள்ளார்.

அவரின் கோபத்தை போக்க கல்லூரிக்கு ஒழுங்காக செல்லும் பல்லவன் விளையாட்டில் அதிகம் ஆர்வம் காட்டி வந்தார் இப்போது பல பதக்கங்களையும் வென்றுள்ளார். தான் பதக்கம் வாங்கும் போது எல்லோரும் வர வேண்டும் என கூற சேரன் மட்டும் வர மறுக்கிறார்.

நிகழ்ச்சியும் தொடங்கி பல்லவன் மேடை ஏறும் வரை சேரன் வரவில்லை, பின் கடைசியில் வருகிறார். சேரனை பார்த்த சந்தோஷத்தில் பல்லவன் தனது பதக்கங்களை அவருக்கு போட்டு அழகு பார்க்கிறார்.

இதோ அந்த எமோஷ்னலான புரொமோ,