மதுரை முத்து

பட்டிமன்ற மேடைகளில் தனது பயணத்தை தொடங்கியவர் தான் மதுரை முத்து. தனித்துவமான பேச்சு, உடனடி நகைச்சுவை, சமூக விஷயங்களை எளிதாக கொஞ்சம் நகைச்சுவையாகவும் சொல்லும் திறன் கொண்டவர்.



தனது இரு மகள்களுடன் சென்று புதிய காரை வாங்கியுள்ள மதுரை முத்து... வீடியோவுடன் இதோ - Related Image

பின் தொலைக்காட்சி பக்கம் வந்தவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடம் மிகவும் பிரபலமானார்.

இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தாண்டி பட்டிமன்றங்கள், தனியார் நிகழ்ச்சிகள் என பங்குபெற்று எல்லோரையும் தனது நகைச்சுவை பேச்சால் சிரிக்க வைத்து வருகிறார்.

சமீபத்தில் மதுரை முத்து தனது இரண்டு மகள்களுக்கும் பாரம்பரிய முறையில் பூப்புனித நீராட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் உறவினர்களை தாண்டி நிறைய பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

புதிய கார்

தனது நகைச்சுவை பேச்சால் மக்களை சிரிக்க வைக்கும் மதுரை முத்து எப்போதும் இன்ஸ்டாவில் தான் செய்யும் விஷயங்கள் குறித்து பதிவுகள் போட்ட வண்ணம் இருப்பார்.

அப்படி அவர் சமீபத்தில் ஒரு சூப்பரான பதிவு போட்டுள்ளார். அதாவது அவர் தனது 2 மகள்களையும் அழைத்துக்கொண்டு புதிய காரை வாங்கியுள்ளார். சிவப்பு நிற Tata Sierra காரை வாங்கியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை பதிவிட்டு, எங்க வீட்டில் சிகப்பாய் ஒரு குழந்தை பிறந்துள்ளது

Tata sierra

உடனே பிரம்மாண்ட காரை பார்த்தீர்களா !??என்று போட்டு

பீதியை கிளப்ப வேண்டாம் இன்னும் முதல் இஎம்ஐ கட்டவில்லை என அவருக்கு உரிய நகைச்சுவையான பதிவு போட்டுள்ளார்.

இதோ வீடியோ,

View this post on InstagramA post shared by Muthu Ramasamy (@mathuraimuthuofficial)

View this post on InstagramA post shared by Muthu Ramasamy (@mathuraimuthuofficial)

View this post on Instagram

View this post on Instagram

A post shared by Muthu Ramasamy (@mathuraimuthuofficial)