மைக்கேல்

கடந்த வாரம் வெளிவந்து உலகளவில் வசூல் வேட்டையாடி வரும் திரைப்படம் மைக்கேல். நடனத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.



மைக்கேல் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம் - Related Image

இப்படத்தில் மைக்கேல் ஜாக்சனின் அண்ணன் மகன் ஜாஃபர் ஜாக்சன் ஹீரோவாக நடித்திருந்தார். அச்சு அசல் அப்படியே மைக்கேல் ஜாக்சன் போலவே நடனம், நடிப்பு, பாடல் பாடுவது என பட்டையை கிளப்பியிருந்தார்.

வசூல்

கடந்த வாரம் 24ஆம் தேதி வெளிவந்த மைக்கேல் திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில், 4 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும்மைக்கேல்திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 2200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என கூறப்படுகிறது.