துரந்தர்

இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்தார்.



விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் துரந்தர் திரைப்படம்.. என்று, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது தெரியுமா? - Related Image

மேலும், அக்ஷய் கண்ணா, மாதவன், அர்ஜுன் ராம்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து துரந்தர் 2 இந்த ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பு

துரந்தர் முதல் பாகம் திரையரங்கில் எந்த அளவிற்கு கொண்டாடப்பட்டதோ, அதே அளவிற்கு ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், அடுத்ததாக தொலைக்காட்சியில் துரந்தர் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. அதுவும் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாக உள்ளது.

வருகிற மே 31ஆம் தேதி விஜய் டிவியில் தமிழ் பதிப்பில் மாலை 7 மணிக்கு துரந்தர் முதல் பாகம் ஒளிபரப்பாகும் என அறிவித்துள்ளனர்.

மேலும், Asianet, ஸ்டார் மா, கலர்ஸ் கன்னடா ஆகிய தொலைக்காட்சிகளிலும் இப்படம் மே 31ஆம் தேதி ஒளிபரப்பாகிறது. இதனால் கண்டிப்பாக TRP மிகப்பெரிய உச்சத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

View this post on InstagramA post shared by JioStar Entertainment Ads (@jiostarentertainmentads)

View this post on InstagramA post shared by JioStar Entertainment Ads (@jiostarentertainmentads)

View this post on Instagram

View this post on Instagram

A post shared by JioStar Entertainment Ads (@jiostarentertainmentads)

You May Like this Video