


சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பராசக்தி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் சேயோன் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் அறிவிப்பு வீடியோவே களைகட்டிய நிலையில், பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தை திரையரங்கில் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள்.

திரையுலக பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். ஆனால், அந்த விஷயத்தில் சம்மந்தப்பட்டவர்கள் அதை வெளியே கூறும் வரை வெளியே தெரிவது இல்லை. இந்த நிலையில், பிரபலநடிகர்பிரேம் குமாரின் மகன் படிப்பிற்காக சிவகார்த்திகேயன் மிகப்பெரிய உதவி ஒன்றை செய்துள்ளார். இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பிரேம் குமார் வெளிப்படையாக பேசியுள்ளார்.
நெகிழ்ச்சியாக பேசிய நடிகர் பிரேம்
அவர் கூறியதாவது, "என் இரண்டாவது மகனுக்கு படிக்க நெதர்லாந்தில் சீட் கிடைத்தது. எஜிகேஷன் லோன் போட்டேன், ஆனால் அது கிடைக்கவில்லை. ஏனென்றால் அதற்கு உத்திரவாதம் (surety) கொடுக்க என்னிடம் வீடு மட்டும்தான் இருந்தது. ஆனால், அதுவும் ஏற்கனவே EMI-ல் இருப்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இதன்பின், இதுகுறித்து தம்பி சிவகார்த்திகேயனிடம் சென்று பேசினேன். அவர் ஒன்றுமே கேட்கவில்லை, உடனே ஒரு வங்கியில் ரூ. 50 லட்சம் ஃபிக்சட் டெபாசிட் (FD) முறையில் collateral-ஆக எனக்கு கொடுத்தார். அதெலெம் ரொம்ப பெரிய விஷயம். அதை திரும்ப அவரிடம் கொடுக்காமல் இருந்தாலும், அதை பற்றி அவர்க கவலைப்படவில்லை. அதன்பின், அந்த பணத்தை திருப்பி கொடுத்துவிட்டோம். அது உதவி கிடையாது, வாழ்க்கை.
என் மகன் தற்போது மாதம் ரூ. 4 முதல் ரூ. 5 லட்சம் வரை சம்பாதிக்கிறான் என்றால், அதற்கு காரணம் சிவாதான். அதே போல் காப்பான் படத்தில் நடிக்கும் பொது சமுத்திரக்கனி என்னுடனே இருப்பான். அவன் உடனே அக்கவுண்ட் நம்பர் கேட்டு ரூ. 5 லட்சம் கொடுத்தான். இருவருக்கும் நான் ரொம்பவே கடமை பட்டிக்கிறேன்" என கூறினார்.
Source: Entertainment News