
நடிகை நயன்தாரா தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயினாக இருக்கிறார். தற்போது மூக்குத்தி அம்மன் 2, டாக்சிக் உள்ளிட்ட பல முக்கிய படங்களை கைவசம் வைத்திருக்கும் அவர் அவற்றில் பிஸியாக நடித்து வருகிறார்.
ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளமாக அவர் வாங்குகிறார்.
சல்மான் கான் ஜோடி
இந்நிலையில், நயன்தாரா அடுத்து ஹிந்தியில் சல்மான்கான் ஜோடியாக படம் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
வாரிசு பட புகழ் இயக்குனர் வம்சி பைடிபள்ளி அடுத்து இயக்கப் போகும் ஹிந்திப் படத்தில்தான் சல்மான்கான் மற்றும் நயன்தாரா இருவரும் ஜோடியாக நடிக்கப் போகிறார்கள். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.
ஏற்கனவே நயன்தாரா ஷாருக்கான் ஜோடியாக ஜவான் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது அடுத்து இன்னொரு டாப் ஹீரோவுக்கு ஜோடியாக நடிப்பது அவரது கெரியரை இன்னும் உச்சத்திற்கு கொண்டு செல்லும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
View this post on InstagramA post shared by Sri Venkateswara Creations (@srivenkateswaracreations)
View this post on InstagramA post shared by Sri Venkateswara Creations (@srivenkateswaracreations)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by Sri Venkateswara Creations (@srivenkateswaracreations)
Source: Entertainment News