அரசன்

வடசென்னை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் எப்போது என்கிற கேள்வி தொடர்ந்து பல வருடங்களாக கேட்கப்பட்டது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விரைவில் வடசென்னை 2 உருவாகிறது என தனுஷ் கூறினார்.



அரசனுடன் குணா, சந்திரா.. வடசென்னை உலகத்தில் அரசன் படம்.. படப்பிடிப்பு புகைப்படம் இதோ - Related Image

ஆனால், இதற்கு முன் அரசன் என்கிற திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இப்படத்தின் அறிவிப்பு வெளிவந்ததில் இருந்தே, இப்படம் வடசென்னை உலகில் எடுக்கப்படுகிறதா, சிம்பு - தனுஷ் சந்தித்துக்கொள்வார்களா? ராஜன் கதாபாத்திரம் அரசன் படத்தில் உள்ளதா என பல விதமான கேள்விகள் எழுந்தன.

படப்பிடிப்பு புகைப்படம்

அரசன் வடசென்னை உலகில்தான் எடுக்கப்படுகிறது, அதே காலகட்டம் என கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டாலும், அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், தற்போது அரசன் படத்தில்சிம்புவுடன் வடசென்னை படத்திலிருந்து குணா, சந்திரா கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அரசன் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா இருக்கிறார்கள். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ: