
சன் டிவி
தமிழ் சின்னத்திரையில் டிஆர்பி கிங்காக கெத்து காட்டிவரும் தொலைக்காட்சி சன். கடந்த வார டிஆர்பி விவரத்தில் கூட டாப் 5 இடத்தில் சன் டிவி தொடர்கள் தான் இடம்பெற்றள்ளன.
மூன்று முடிச்சு, சிங்கப்பெண்ணே, கயல், மருமகள், அன்னம் இந்த 5 சீரியல்கள் தான் டாப்பில் உள்ளது.
இந்த 5 சீரியல்களுமே பெண்களை மையப்படுத்திய கதை தான், இந்த தொடர்களை தாண்டி எதிர்நீச்சல் தொடர்கிறது, லட்சுமி, வினோதினி, மல்லி போன்ற தொடர்களும் பெண்களுக்கான முக்கியத்துவம் வாய்ந்த கதைகள் தான்.
குட் நியூஸ்
இப்போது ஒரு ஹிட் சீரியல் குறித்து சூப்பர் தகவல் வந்துள்ளது. சன் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியல் மல்லி.
இந்த தொடரில் நிகிதா ராஜேஷ் நாயகியாக நடிக்க விஜய் வெங்கடேசன் நாயகனாக நடித்து வருகிறார். இவர்களை தாண்டி மகாலட்சுமி சங்கர், நளினி, நிரஞ்சனா, பாரதி மோகன், கிருத்திகா என பலர் நடிக்கிறார்கள்.
தற்போது என்ன தகவல் என்றால் இந்த சீரியல் ஒளிபரப்பாக தொடங்கி 700 எபிசோடுகளை எட்டிவிட்டதாம். இந்த சந்தோஷ செய்தியை கேட்ட ரசிகர்கள் சீரியல் குழுவிற்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
View this post on InstagramA post shared by SE (@sun_express___)
View this post on InstagramA post shared by SE (@sun_express___)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by SE (@sun_express___)
Source: Entertainment News