இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய இயக்குனர் ஆகிவிட்டார். அவர் ஹிந்தியில் ஷாருக் கானை வைத்து ஹிந்தியில் இயக்கிய ஜவான் படம் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.

தற்போது அல்லு அர்ஜுனை வைத்து ராக்கா படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. அதை சன் பிக்சர்ஸ் பெரிய பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்தில் தயாரித்து வருகிறது.



அட்லீ அடுத்து ஹிந்தியில் இயக்கும் பிரம்மாண்ட படம்.. ஹீரோ யார் பாருங்க - Related Image

அடுத்த படம்

இந்நிலையை ராக்கா படத்தை முடித்தபிறகு அட்லீ ஹிந்தியில் ஜவான் 2 படத்தை இயக்க போகிறாராம். தற்போது அதற்கான ஸ்கிரிப்ட் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக பாலிவுட் மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.

தற்போது ஷாருக் கிங் படத்தில் நடித்து வருவதால் அதை முடித்தபின் அடுத்த வருடம் ஜவான் 2ல் நடிக்க தொடங்க போகிறாராம்.