


கர
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் கர. இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார்.

இவர் கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற போர் தொழில் திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
கர திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து முதல் முறையாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். மேலும், சுராஜ், கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ் என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
முதல் விமர்சனம்
பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள கர திரைப்படம் வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், கர திரைப்படம் குறித்து தனுஷ் தனது கருத்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவில், "விக்னேஷ் ராஜா - யூ ஜீனியஸ், கர திரைப்படத்திற்கு ரொம்ப நன்றி' என தனுஷ் பதிவிட்டுள்ளார்.
படத்தை பார்த்துவிட்டு தனுஷ் இவ்வாறு பதிவிட்டுள்ளது, படத்தின் முதல் விமர்சனமாக பார்க்கப்படுகிறது. இவருடைய இந்த ரியாக்ஷனை வைத்து படம் கண்டிப்பாக வேற லெவலில் வந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
VIGNESH RAJA - YOU GENIUSThank you for KARA 🙏🙏— Dhanush (@dhanushkraja)April 15, 2026
VIGNESH RAJA - YOU GENIUS
— Dhanush (@dhanushkraja) April 15, 2026
Thank you for KARA 🙏🙏
VIGNESH RAJA - YOU GENIUSThank you for KARA 🙏🙏
Source: Entertainment News