

வீரா சீரியல்
தமிழ் சின்னத்திரை தான் இப்போது மக்களின் முக்கிய பொழுதுபோக்கு விஷயமாக அமைகிறது.

வீட்டுப் பெண்கள் அதிகம் சீரியல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் வித்தியாசமான கதைக்களம் கொண்ட ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
அப்படி ஜீ தமிழில் ரசிகர்கள் கொண்டாடும் முக்கிய தொடராக ஒளிபரப்பாகி வருகிறது வீரா. நடிகை வைஷ்ணவி அருள்மொழி, அருண் உள்ளிட்டவர்கள் இந்த சீரியலில் நடிக்கிறார்.
சீரியலின் நாயகன்-நாயகியாக நடிப்பவர்களுக்கு தனி ரசிகர்கள் வட்டாரமே உள்ளது. சமீபத்தில் இந்த சீரியலின் முதல் பாகம் முடிவடைந்து 7 வருடத்திற்கு பிறகான கதைக்களமாக வீரா இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.
கொண்டாட்டம்
புதிய கதைக்களம், சில நடிகர்கள் மாற்றம் என மாறியுள்ள வீரா சீரியலின் குழுவினர் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். அது என்ன விஷயம் என்றால் வீரா சீரியல் ஒளிபரப்பாகி 600 எபிசோடுகளை எட்டிவிட்டதாம்.
இதனால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர், இதோ அந்த போட்டோஸ்,
View this post on InstagramA post shared by Hemalatha V (@tamilserialexpress)
View this post on InstagramA post shared by Hemalatha V (@tamilserialexpress)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by Hemalatha V (@tamilserialexpress)
Source: Entertainment News