நடிகர் பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார். தொடர்ந்து மூன்று 100 கோடி ரூபாய் வசூல் படங்களைக் கொடுத்திருக்கிறார் அவர்.

லவ் டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் விரைவில் தெலுங்கு சினிமாவில் களமிறங்க இருக்கிறார். அவர் பிரபல இயக்குநர் சந்திரசேகர் ஏலேட்டியுடன் கூட்டணி சேர்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



பிரபல தெலுங்கு இயக்குநருடன் பிரதீப் ரங்கநாதன் கூட்டணி.. புது உச்சத்தைத் தொட்ட சம்பளம் - Related Image

Aithe, சாஹசம், Anukokunda Oka Roju, மனமந்தா போன்ற படங்களை இயக்கியவர் அவர். மைத்ரி மூவிஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

சம்பளம் இத்தனை கோடியா

ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இந்தப் படத்தில் நடிக்க பிரதீப் ரங்கநாதன் 50 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறார் எனவும் தகவல் வந்திருக்கிறது.

இவ்வளவு வேகமாக 50 கோடி சம்பளத்தைத் தொட்டிருக்கும் பிரதீப் ரங்கநாதனைப் பார்த்து மற்ற ஹீரோக்கள் நிச்சயம் ஆச்சரியம் அடைந்திருப்பார்கள் என சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.