
நடிகர் விஜய் த.வெ.க கட்சி ஆரம்பித்து வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறார். விஜய் இரண்டு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இருக்கிறார். மேலும் பிரச்சாரத்தையும் தீவிரமாக அவர் தொடங்கியிருக்கிறார்.
மறுபுறம் பிரபல இயக்குநர் நடிகர் சுந்தர் சி அதிமுக கூட்டணி சார்பில் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார்.
சமீபத்தில் பிரச்சாரத்தில் பேசிய விஜய் "போட்டி இரண்டு பேருக்கு நடுவில் தான்" என கூறி இருந்தார். அதனால் விஜய்யை விமர்சிப்பீர்களா என சுந்தர் சி-யிடம் செய்தியாளர்கள் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் என்ன பதில் சொல்லியிருக்கிறார் எனப் பாருங்க.
விமர்சிக்க மாட்டேன்..
"விஜய் சார் என் மீது மதிப்பும் அன்பும் கொண்டவர். நானும் அதே மாதிரிதான். என் மனைவி குஷ்பூ அவரைத் தம்பியாகத் தான் கருதுகிறார். அவரும் அக்கா என்றுதான் எப்போதும் கூப்பிடுவார். அதனால் அவரைப் பற்றி விமர்சிக்கவோ அவரது கட்சி பற்றி விமர்சிக்கவோ நான் தயாராக இல்லை. ஆனால் நான் போட்டியிடும் மதுரை மத்திய தொகுதியில் போட்டி என்பது உதயசூரியனுக்கும் இரட்டை இலைக்கும் மட்டும்தான்" என சுந்தர்.சி கூறியிருக்கிறார்.
View this post on InstagramA post shared by IBC Tamil (@ibctamilmedia)
View this post on InstagramA post shared by IBC Tamil (@ibctamilmedia)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by IBC Tamil (@ibctamilmedia)
Source: Entertainment News