தொலைக்காட்சி

திரையரங்கில் படத்தை கொண்டாடி, ஓடிடியில் அப்படத்தை மீண்டும் பார்த்தாலும், தொலைக்காட்சியில் ஒரு படத்தை பார்க்கும் மகிழ்ச்சி என்பது எப்போதுமே தனிதான்.



ஏப்ரல் மாதம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவுள்ள ஸ்பெஷல் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ - Related Image

அதுவும் முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் படம் என்றால் சொல்லவே தேவையில்லை, இரட்டிப்பு மகிழ்ச்சிதான். ஒவ்வொரு வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை அன்று எந்த தொலைக்காட்சியில், என்ன திரைப்படம் ஒளிபரப்பாகப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கும்.

இந்த நிலையில், இந்த ஏப்ரல் மாதம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகப் போகும் ஸ்பெஷல் திரைப்படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.

ஸ்பெஷல் திரைப்படங்கள்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் இரண்டாவது முறையாக சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. கிஷன் தாஸ் நடிப்பில் வெளிவந்த அரோமலே திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பிரதீப் ரங்கநாதனின் Dude தமிழ் புத்தாண்டு அன்று ஜீ தமிழில் ஒளிபரப்பாக வாய்ப்புள்ளது. இதை தவிர, பூக்கி திரைப்படமும் ஜீ தமிழில் இம்மாதம் ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.