

எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் அடுத்து என்ன அடுத்து என்ன என ரசிகர்கள் ஆர்வமாக கேட்கும் அளவிற்கு விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.

இதில் ஜனனியாக நடிக்கும் பார்வதி சமீபத்திய ஒரு பேட்டியில், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் கதைக்களமே மொத்தமாக மாறப்போகிறது, காத்திருந்து பாருங்கள் என்று கூறியிருந்தார்.
அதற்கு ஏற்றார் போல் கதையில் குணசேகரன் மிகவும் அடங்கி இருப்பதாக காட்டப்படுகிறது, அதற்கு பதில் ராணாவின் ஆட்டம் துவங்கியிருப்பதாக தெரிகிறது.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், ஜனனி-சக்தி இருவரும் சாருபாலாவிடம் வழக்கு குறித்து பேசுகிறார்கள். அவர் குணசேகரன்-ஈஸ்வரியை தாக்கிய வீடியோ கிடைத்தால் வழக்கில் வேகமாக முன்னேறலாம் என்கிறார்.
ஜனனி, வீடியோ யாரிடம் தான் உள்ளதோ என புலம்புகிறார்.
இன்னொரு பக்கம் ராணா, குணசேகரன் வீடியோவை கைப்பற்றி அவரது குடும்பத்தையே அழிக்க நினைக்கிறார்.
Source: Entertainment News