

அட்லீ - அல்லு அர்ஜுன்
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று இந்திய அளவில் முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ளார் அட்லீ. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ஜவான் திரைப்படம் ரூ. 1100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அல்லு அர்ஜூனுடன் முதல் முறையாக அட்லீ கைகோர்த்தார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ராக்கா
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றுஅல்லுஅர்ஜுன் பிறந்தநாள் ஸ்பெஷலாக, இப்படத்தின் டைட்டில் மற்றும் First லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
அட்லீ - அல்லு அர்ஜுன் திரைப்படத்திற்கு 'ராக்கா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை எந்த திரைப்படத்திலும் இல்லாத அளவிற்கு மாறுபட்ட தோற்றத்தில் அல்லு அர்ஜுன் இப்படத்தில் நடித்துள்ளார். இதோ அந்த போஸ்டர் பாருங்க:
Source: Entertainment News