தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் டாப் நாயகிகளில் ஒருவர் தான் நடிகை ஆல்யா மானசா.

மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சி மூலம் தனது மீடியா பயணத்தை துவங்கியவர் அடுத்து விஜய் டிவி பக்கம் ராஜா ராணி என்ற சீரியல் மூலம் நாயகியாக களமிறங்கினார். முதல் சீரியலே அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது, அந்த சீரியலில் நாயகனாக நடித்த நடிகர் சஞ்சீவுடன் காதலும் ஏற்பட திருமணமும் செய்துகொண்டனர்.



சீரியல் நடிகை ஆல்யா மானசாவா இது, 11வது படிக்கும் போது எப்படி உள்ளார் பாருங்க.... போட்டோஸ் - Related Image

இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

ராஜா ராணி சீரியலுக்கு பிறகு ஆல்யா மானசா ராஜா ராணி 2, இனியா தொடர்கள் நடித்தார், இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பாரிஜாதம் சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.

பழைய போட்டோ

ஆல்யா மானசா சீரியல்களில் நடிப்பதை தாண்டி நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நடன நிகழ்ச்சிகள், போட்டோ ஷுட், கடை திறப்பு விழா என தன்னை தேடிவரும் வாய்ப்புகளை பயன்படுத்தி வருகிறார்.

அதேபோல் இன்ஸ்டாவிலும் மிகவும் ஆக்டீவாக இருக்கும் நடிகை ஆல்யா மானசா இப்போது சில பழைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதாவது அவர் 11வது படிக்கும் போது ஜப்பான் சென்றுள்ளார், அங்கு சக மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார். அதனை அவர் பதிவிட அட நம்ம ஆல்யா மானசாவா இது என ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

View this post on InstagramA post shared by alya_manasa (@alya_manasa)

View this post on InstagramA post shared by alya_manasa (@alya_manasa)

View this post on Instagram

View this post on Instagram

A post shared by alya_manasa (@alya_manasa)