


பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பதுதான் ஒரு திரைப்படத்தின் வெற்றியை குறிக்கிறது. அதுவும் இன்றைய காலகட்டத்தில் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் என்றால், ரூ. 100 கோடி வசூல் செய்துவிட்டதா? ரூ. 500 கோடி வசூல் செய்துவிட்டதா என ரசிகர்களே கேட்க தொடங்கிவிட்டனர்.
Patriot

கடந்த வாரம் ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த திரைப்படம்Patriot. இப்படத்தை இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்க மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடித்திருந்தனர்.
மேலும் நயன்தாரா, பகத் பாசில், குஞ்சாகோ போபன், தர்ஷனா, ரேவதி, ராஜிவ் மேனன் என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த Patriot திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது.
வசூல்
இந்த நிலையில், 3 நாட்களில் Patriot திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை உலகளவில் ரூ. 60 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Source: Entertainment News