

கர
2026ஆம் ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று கர. இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்க, தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் வேல்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக முதல் முறையாக நடிகை மமிதா பைஜூ நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து ஜெயராம், கருணாஸ், சுராஜ், பிரித்வி, கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
வசூல்
கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இதனால் முதல் நாளில் இருந்தே வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.
இந்த நிலையில், 3 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் கர திரைப்படம் இதுவரை செய்துள்ளவசூல்குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 3 நாட்களில் இப்படம் ரூ. 26 கோடி உலகளவில் வசூல் செய்துள்ளது.
Source: Entertainment News